தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது.. அனேகமாக ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. எனவே தேர்தல் களத்தை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பேசுவது, வேட்பாளர்களை நியமிப்பது, பூஜ் ஏஜெண்டுகளை நியமிப்பது என அரசியல் கட்சிகள் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது..
ஒருபக்கம் 2020 சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கும் என்கிற கருத்துக்கணிப்பையும் பலரும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் Voter Vibe நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு படி வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 35.8 சதவீதமும், அதிமுக 33. சதவீதமும் வாக்குகளை வாங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
அதாவது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இரண்டு சதவீத ஓட்டு வித்தியாசம் மட்டுமே இருக்கும் என அதில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மூன்றாவது இடத்தில் உள்ள தவெக 19.2 சதவீத வாக்குகள் வாங்கும் எனவும் 4.7 சதவீதம் பேர் இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..
ஏற்கனவே சாணக்கியா - தினமலர் கருத்துக்கணிப்பில் அதிமுக - பாஜக கூட்டணி 38 சதவீத வாக்குகளையும், திமுக 33 சதவீத வாக்குகளையும், தவெக 22 சதவீத வாக்குகளையும் வாங்கும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..