Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொய் பேசி ஒரு கூட்டம் என்னை ஒழிக்கப் பார்க்கிறது!.. ராமதாஸ் வேதனை!...

Advertiesment
ramadoss

Mahendran

, வியாழன், 12 பிப்ரவரி 2026 (11:21 IST)
பாட்டாளி மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கியவர் டாக்டர் ராமதாஸ். அவருக்கு பின் அவரின் மகன் அன்புமணி அரசியலுக்கு வந்தார். அன்புமணியை ராமதாஸ் மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். அதேநேரம், கடந்த சில மாதங்களாகவே அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது பாமக அன்புமணி மற்றும் டாக்டர் ராமதாஸ் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது..

பாமகவுக்கு நான்தான் தலைவர் என ராமதாஸ் சொல்லி வருகிறார்.. ஆனால் அன்புமணியின் பதவிக்காலம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இதை தங்களின் வெற்றியாக அன்புமணி பார்க்கிறார்.  ஒருபக்கம் ஏற்கனவே அவர் பாஜக, அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்திருக்கிறார்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் ‘பொய் பேசியே ஒரு கூட்டம் என்னை ஒழிக்கப் பார்க்கிறது. பல வருடங்களாக கட்சிக்காக உழைத்து வரும் ஜிகே மணியை வசை பாடுவதை முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள்.. இந்த குள்ளநரி கூட்டம் என்னை அரசியலில் இருந்து ஒழிக்கப் பார்க்கிறது’ என்று பேசியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வங்கதேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்: ஷேக் ஹசீனாவுக்கு பிந்தைய புதிய அரசியல் விடியல்!