Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சியில் பங்கு தரமுடியாதுன்னா திமுக தனித்து போட்டியிடுமா?!.. தவெக கேள்வி!..

Advertiesment
MK Stalin

Mahendran

, புதன், 11 பிப்ரவரி 2026 (18:49 IST)
கடந்த பல தேர்தலாகவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது. அதேநேரம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரசுக்கு திமுக பங்கு கொடுப்பதில்லை. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களுக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்பி, காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.

ஒருபக்கம் இதன் காரணமாக காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து கூட இதுவரை முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா டுடே கருத்தரங்கில் இன்று காலை பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று கூறிவிட்டார்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘முதல்வர் என்று அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால்தான் திமுகவுடையது.. மீதி 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை வெறும் ஓட்டு வாங்கியாக மட்டுமே பயன்படுத்தி அதிகார பகிர்வு அளிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல்.. ஆட்சியில் பங்கு தரமாட்டோம் என்றால் திமுக தனித்து போட்டியிடும் என முதல்வரால் சொல்ல முடியுமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டொனால்டு டிரம்ப் குறித்து ஆக்ரோஷமான விவாதம்.. மகளை சுட்டு கொலை செய்த தந்தை..!