Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

Advertiesment
premalatha
சட்டசபை தேர்தல் வந்தாலே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி கணக்கு போடுவார்கள். குறிப்பாக எந்த கட்சியுடன் போனால் தங்களுக்கு லாபம் என யோசிப்பார்கள். கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் ஒரே கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பார்கள்.. அப்படித்தான் இந்திய முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் தொடர்ந்து திமுககூட்டணியில் நீடித்து வருகிறது..

ஆனால் தேமுதிக கட்சி துவங்கியதிலிருந்து முதல் தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிட்டது. அதன் பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இப்போது வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி பேரம் பேசுவது தேமுதிக வழக்கமாக கொண்டிருக்கிறது.  விஜயகாந்துக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் பிரேமலதா அந்த முடிவு எடுத்ததாக சொல்லப்பட்டது. இப்போதும் பிரேமலதா அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்..

முதலில் 20 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என தொடங்கினார் பிரேமலதா. அதை திமுக. அதிமுக இரண்டு கட்சிகளுமே கொடுக்கவில்லை.. எனவே அதிலிருந்து இறங்கி வந்து 10 தொகுதிகளை கேட்டார்.. ஒருபக்கம் ஒரு ராஜ்ய சபா சீட் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால் அந்த கூட்டணிக்கு செல்லலாம். அப்போது கேட்டதை கொடுப்பார்கள் என கணக்கு போடுகிறாராம் பிரேமலதா. ஒரு பக்கம் டிடிவி தினகரனுக்கு எதிராக சசிகலா வேட்பாளரை நிறுத்தினால் தென் மாவட்டங்களில் வாக்குகள் சீதறும். அதை சரி செய்யவே பிரேமலதாவை கூட்டணியில் கொண்டுவர பழனிச்சாமி விரும்புகிறார். இப்படி தனக்கு டிமாண்ட் இருப்பதால்தான் பிரேமலதா கறாராக பேரம் பேசி வருகிறார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..