Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிவாலயத்தில் பிரேமலதா!.. திமுக கூட்டணியில் தேமுதிக!.. காங்கிரஸுக்கு செக் வைக்கும் முக ஸ்டாலின்..

Advertiesment
dmdk
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே இருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது
. இதில் சில கட்சிகள் திமுகவுடன், சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால் தேமுதிக, காங்கிரஸ் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக அது மூன்று கட்சிகளும் மட்டும் இதுவரை எந்த கூட்டணிலும் இணையவில்லை..

காங்கிரசை பொருத்தவரை கடந்த பல வருடங்களாக திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது அதேநேரம் திடீரென ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும், எங்களுக்கு 40 தொகுதிகள் கொடுக்க வேண்டும், அமைச்சர் பதவி வேண்டும் என்றெல்லாம் காங்கிரஸ் டிமாண்ட் வைத்ததால் திமுகவுக்கு அது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது..

ஒருபக்கம் தேமுதிக யாரிடம் கூட்டணி அமைக்கும் என்பது தெரியாமல் இருந்தது. கடந்த சில தேர்தல்களை தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தது.. ஆனால் குறைந்தபட்சம் 10 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்கிறார் பிரேமலதா.. ஆனால் அதை கொடுக்க அதிமுக தயாராக இல்லை.. எனவே திமுகவுடன் தொடர்ந்து பேசி வந்தார் பிரேமலதா..

ஒருபக்கம், காங்கிரஸ் முரண்டு பிடித்து வருவதால் தேமுதிக கூட்டணிகயை கொண்டு வரும் முயற்சியில் திமுக ம் இறங்கியது. அதாவது காங்கிரஸுக்கு செக் வைக்கும் வகையில் தேமுதிகவை திமுக கூட்டணியில் கொண்டுவருவதாக தெரிகிறது. தற்போது திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்திற்கு பிரேமலதா விஜயகாந்தும், அவரின் சகோதரர் சுதீஷும் வந்திருக்கிறார்கள். அதோடு, அங்கு சில அமைச்சர்களும் கூடியிருக்கிறார்கள். இதன் மூலம் தேமுதிக திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..