அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பரமேஸ்வரி என்ற பாஜக நிர்வாகி, "துணை முதல்வர் நாகேந்திரன் அவர்களே..." என்று கூறி பேச தொடங்கினார். இதனால் மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன் சற்று பதட்டம் அடைந்தார். உடனடியாக பரமேஸ்வரியை நோக்கி, "அப்படியெல்லாம் அழைக்கக் கூடாது" என்று மேடையிலேயே அறிவுறுத்தினார். இதனால் பாஜகவினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருந்த நிலையில், தற்போது பாஜக கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் "துணை முதல்வர்" என்று அழைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், அதிமுக-பாஜக கூட்டணிக்குள் அதிகார பகிர்வு குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.