தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளை போலவே மம்தா பானர்ஜியும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை அவர் வங்க மொழி பேசுபவர்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்களை "வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள்" என்று கூறி கைது செய்வதும், நாட்டை விட்டு அனுப்புவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து அவர் குற்றம் சாட்டியுள்ளார். வங்க மொழி பேசுபவர்கள் எல்லோரும் வங்கதேசத்தினர் அல்ல என்றும், பா.ஜ.க.வின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "உண்மையிலேயே இந்தியாவில் பிறந்து வளர்ந்த வங்க மொழி பேசுபவர்கள் தங்களுடைய ஒரிஜினல் ஆதார் அட்டையுடன் நீதிமன்றம் செல்வார்கள்" என்றும், எனவே பா.ஜ.க. அரசு வங்க மொழி பேசுபவர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த தேர்தலில் வெவ்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்த மம்தா பானர்ஜி, இந்த முறை மிகவும் சென்சிட்டிவ் ஆன வங்க மொழி பேசுபவர்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையை எடுத்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் பதிலடி என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.