Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வயது சிறுமி வாயைப் பொத்தி வன்கொடுமை! குற்றவாளியை பிடிக்கவில்லை! - அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!

Advertiesment
Annamalai Post

Prasanth K

, வியாழன், 17 ஜூலை 2025 (11:13 IST)

திருவள்ளூரில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமியை மர்ம நபர் வாயைப் பொத்தி கடத்திச் சென்று வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஷேர் செய்துள்ள சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை “திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

 

குற்றம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

 

இத்தனை தைரியமாக, சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி, இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது. 

 

காவல்துறை இனியும் தாமதிக்காமல்,  உடனடியாக இந்தக் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!