Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்து விபத்தில் சிக்கிய தம்பதியர்; 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்டு பலி!

Advertiesment
Accident
, வியாழன், 5 ஜனவரி 2023 (08:52 IST)
கோவை மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற தம்பதியர் பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தேவி. இருவரும் பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை இருவரும் காலை 6 மணியளவில் சைக்கிளில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் தவறி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது பேருந்து ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல் பேருந்தில் சிக்கி சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தம்பதியர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு பேருந்து டிரைவர் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்க வீரர் மரணம்!