Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்னூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது- தமிழ்நாடு அரசு

Advertiesment
அன்னூரில்  விவசாய  நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது- தமிழ்நாடு அரசு
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:30 IST)
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் என்ற பகுதியில் உள்ள விவசாய  நிலங்களைக் கையகப்படுத்தித் தொழில்பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது.

இதற்கு எதிராக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று தமிழக அரசு, இந்த அரசாணையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,  ''தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, (அரசு ஆணை எண்.202, தொழில், மு.ஊ (ம) வர்த்தகத்ப் (எம்.ஐ.இ.1) துறை, நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராஜா அவர்கள், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்.

மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க
விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு மட்டுமே செயல்படும்.

அவர்களின் நலனிற்காக இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும்.

எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

P.E.T பீரியட் வேளையில் மற்ற பாடங்கள் எடுக்ககூடாது- அன்பிஷ் மகேஷ்-