Publish Date: Mon, 19 Dec 2022 (12:48 IST)
Updated Date: Mon, 19 Dec 2022 (12:50 IST)
கிருஷ்ணகிரியில் பேருந்து ஓட்டுனருக்கு வலிப்பு வந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக்குகள் மீது மோதிய விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அந்த பேருந்தை பழனி என்பவர் இயக்கி வந்துள்ளார். பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அருகே வந்தபோது டிரைவர் பழனிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைக்குகளை அடித்து மோதியது. இதில் சாலையோரம் நின்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக முதியவரும், டிரைவர் பழனியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் முதியவர் செல்லும் வழியிலேயே பலியான நிலையில், டிரைவர் பழனிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.