அமெரிக்க விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1960களில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் அப்பல்லோ திட்டத்தை தொடங்கியது. படிப்படியாக அதில் பல ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் அப்பல்லோ 7 விண்கலம் மூலமாக 3 விண்வெளி வீரர்கள் முதல்முறையாக விண்வெளிக்கு பயணித்தனர்.
அப்பல்லோ 7 விண்கலத்தில் டான்.எப்.ஐசெல், வால்டர் எம் ஷிரா, வால்டர் கன்னிங்ஹாம் ஆகியோர் விண்வெளிக்கு பயணித்து 11 நாட்கள் விண்வெளியில் சுற்றி வந்து பின்னர் பத்திரமாக தரையிரங்கினர். மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இந்த பயணம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
இந்த விண்வெளி பயணத்தில் பங்கேற்ற இருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் வால்டர் கன்னிங்ஹாம் தனது 90வது வயதில் தற்போது காலமானார். அவருக்கு விஞ்ஞானிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.