ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பரப்புரை செய்யலாம், கருத்து தெரிவிக்கலாம். விஜய்க்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுங்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தமிழக அரசுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள், விஜய்க்கு முழுமையான சுதந்திரத்தை கொடுங்கள். அவரை தடுத்து நிறுத்தாமல், பிரச்சாரம் செய்ய அனுமதியுங்கள். அவர் என்ன பேசுகிறார், அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறியட்டும். ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று” என்று கூறினார். இந்த கருத்து, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஆதரவாக அமைந்ததுடன், ஆளும் தரப்புக்கு ஒரு மறைமுக செய்தியையும் கொடுத்தது.
விஜய் காங்கிரஸை விமர்சிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். எங்களை விமர்சிப்பதற்கு அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இல்லை” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.