Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீக்கிரம் விஜய் திமுக வந்துடுவார்.. அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கணும்! - சைடு கேப்பில் கமலையும் கலாய்த்த கரு.பழனியப்பன்!

Advertiesment
Vijay karu palaniyappan

Prasanth K

, செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (08:42 IST)

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ கூட்டத்தில் பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், விரைவில் விஜய் திமுகவில் இணைந்துவிடுவார் என பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் புதிதாக கட்சித் தொடங்கி விஜய்யும் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் சுவாரஸ்யம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. தற்போது வார இறுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வரும் விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் நிலையில், திமுக மேடைகளிலும் விஜய் மீதான விமர்சனங்கள் கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் நேற்று சிவகங்கையில் நடந்த திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் “நான் எந்த மேடையிலுமே விஜய்யை விமர்சித்து பேச மாட்டேன். ஏனென்றால் அவர் எப்படியும் கொஞ்ச காலம் கழித்து திமுகவில் வந்து சேர்ந்து விடுவார். அப்போது நாம்தான் அவருக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டும்” என பேசியுள்ளார்.

 

முன்னதாக திமுகவை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், பின்னர் திமுகவுடனே இணைந்து தற்போது ராஜ்யசபா சீட் வாங்கியுள்ளதை கிண்டல் செய்யும் விதமாக கரு.பழனியப்பன் பேசியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Instagram, YouTube-இல் பெருகும் AI ஆபாச வீடியோக்கள்: எச்சரிக்கை விடும் சமூக ஆர்வலர்கள்.