கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

Mahendran
திங்கள், 24 நவம்பர் 2025 (12:01 IST)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் இன்று சிபிஐ விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.
 
தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், கரூரில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகளின் முன் ஆஜராகியுள்ளனர்.
 
முன்னதாக சென்னை பனையூர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய சிபிஐ, தற்போது முக்கிய நிர்வாகிகளை கரூர் வரவழைத்து நேரில் விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கு தொடர்பாக பலியானோர் குடும்பத்தினர், காயமடைந்தோர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments