தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கரூருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், "விஜய் கரூருக்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்" என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கரூருக்கு சென்ற நிலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் கரூருக்கு செல்ல இருப்பதாகவும், அதற்காக அவர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் அதிக கூட்டம் வர வாய்ப்பிருக்கும். அப்போது அவரது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?" என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.