Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கு எதிராக சீமானின் ‘தர்மயுத்தம்’.. என்ன நடக்கும்?

Advertiesment
Vijay

Siva

, புதன், 8 அக்டோபர் 2025 (17:53 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகளுக்கு முன் நடித்து முடித்த ஒரு திரைப்படம், நடிகர் விஜய்யின் புதிய படத்துக்கு போட்டியாக பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
 
சீமான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 'தர்ம யுத்தம்' என்ற திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, இப்போது நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. நடிகர் விஜய்யின்  'ஜனநாயகன்' திரைப்படமும் அதே ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் தினத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, அரசியல் களத்தில் விஜய்யின் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இப்போது திரையரங்கிலும் அவருடைய படத்துடன் மோதும் வகையில் சீமானின் படம் வெளியாகிறது. இது திரையுலக வட்டாரத்திலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் விஜய்க்கு எதிரான சவால் விடுக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
 
படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா இந்த படம் குறித்து கூறுகையில் , 'தர்ம யுத்தம்' படம் ஒரு பெண் உரிமைகளை பேசும் படமாக இருக்கும் என்றும், சீமான் தனது வழக்கமான பாணியில் அல்லாமல், மிகக் குறைந்த வசனங்களுடன், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.. ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் வருத்தம்: