தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கரூர் செல்ல அனுமதி கேட்டு எழுதிய கடிதத்திற்கு, டிஜிபி அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கவும், நிதி உதவி வழங்கவும் தன்னை கரூர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், வரும் வழி, நிகழ்ச்சி நிரல் ஆகிய அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.
விஜய்யின் சார்பில் விவரங்கள் முழுமையாக அளிக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவற்றை ஆலோசித்து, விஜய் கரூர் செல்வதற்கான அனுமதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் டிஜிபி அலுவலகம் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.