Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லா பிரச்சினைகளுக்கும் பெண்களே காரணம்! – பாக்யராஜ் சர்ச்சை பேச்சு!

Advertiesment
எல்லா பிரச்சினைகளுக்கும் பெண்களே காரணம்! – பாக்யராஜ் சர்ச்சை பேச்சு!
, செவ்வாய், 26 நவம்பர் 2019 (18:06 IST)
சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல என இயக்குனர் பாக்யராஜ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் ’கருத்துக்களை பதிவுசெய்’ என்ற புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “சமீப நாட்களாக தினசரிகளில் கள்ள காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, குழந்தையை கொன்ற தாய் போன்ற செய்திகள் அதிகம் வருகின்றன. இதற்கு காரணம் பெண்கள் தங்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்ததுதான். பொள்ளாச்சி விவகாரத்தில் இவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல. அதற்கு வாய்ப்பு கொடுத்த பெண்களும்தான்!” என கூறியுள்ளார்.

பாக்யராஜ் இவ்வாறு பேசியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆண்கள் இரண்டாம் மணம் செய்து கொள்வது பற்றியும் நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியுள்ளதற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வியில் முடிந்த அமித் ஷாவின் ஐடியா... நாளை பெரும்பான்மையை நிரூபிக்க இன்று டிரெயிலர்..