Publish Date: Tue, 26 Nov 2019 (12:39 IST)
Updated Date: Tue, 26 Nov 2019 (12:44 IST)
உள்ளாட்சி தேர்தலில் பெண்கள், பட்டியலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தர கோருவது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதில் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
உள்ளாட்சித் தேர்தலில் துணை மேயர் உள்ளிட்ட பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜனவரி 7 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டு எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.