Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் தவறு இருக்கிறது – பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சு !

Advertiesment
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் தவறு இருக்கிறது – பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சு !
, செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:25 IST)
பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் அந்த பெண்கள் மேலும் தவறு இருக்கிறது என இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் காதலிப்பது போல நடித்து பெண்களை தங்கள் சொகுசு வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே கும்பலாக அவர்களை அடித்து கொடுமைப் படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டது ஒரு கும்பல். இவர்கள் பற்றிய தகவல் வெளி உலகத்துக்கு வர தமிழ்நாடே பரபரப்பானது. இதையடுத்து முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வழக்கில் ஆளும்கட்சியின் தலையீடு அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் இல்லை என கூறி அவர்கள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் ’பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் மீது மட்டும் தவறு இல்லை; பெண்கள் மீதும் தவறு உள்ளது. அந்த பெண்களின் பலகீனத்தை அந்த ஆண்கள் உபயோகப்ப்டுத்திக் கொண்டுள்ளனர்’ என கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் 'கைதி' வெளியானதற்கு காரணம் என்ன?