மதுரையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருக்கும் ஒருவர் அஜித் பெயரில் கட்சி பெயர் வைத்து விளம்படம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெரும் அரசியல் கட்சிகள் தற்போதே விருப்ப மனுக்களை பெறுவது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது என பிஸியாக இருக்கின்றன. இந்த தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் குறிவைப்பது தமிழக மாநகராட்சிகளில் உள்ள மேயர் பதவிகளைதான் என பேசிக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தயாராகி வரும் ரைட் சுரேஷ் என்பவர் அஜித் பெயரில் “அஜித் திராவிட முன்னேற்ற கழகம்” என்று போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெயரை சுருக்கமாக அதிமுக என்றுதான் வருகிறது.
அஜித் அரசியல்லுக்கு வருவார் என பலர் கொக்கி போட்டும் சிக்காமல் “ஓட்டு போடுவதை தவிர எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை” என்று சொன்னார் அஜித். தனது அஜித் நற்பணி மன்றங்களில் உள்ளவர்கள் அரசியல்ரீதியான செயல்பாடுகளை செய்வதாக அறிந்ததும், உடனே மன்றங்களையே கலைத்து போட்டவர் நடிகர் அஜித்.
இந்நிலையில் அவர் பெயரில் கட்சி பெயர் வைத்து போஸ்டர் ஒட்டுவது அவரது கவனத்துக்கு சென்றதா என தெரியவில்லை. அவருக்கு தெரிந்தால் அவரது ரசிகராக இருந்தாலுமே அவர் கண்டித்து விடுவார் என்றே அஜித் ரசிக வட்டாரங்கள் கூறுகின்றன.