சென்னையில் மழைநீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை கலக்க விட்டால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் குப்பை அள்ளும் மோட்டார் எந்திரங்கள் செயல்பட உள்ளன. அவற்றை இன்று தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். அப்போது பேசிய அவர் ”சென்னையில் ஒரு நாளைக்கு 5000 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகின்றன. அவற்றை மறுசுழற்சி செய்ய புதிய திட்டங்கள் தயாராகி வருகின்றன” என அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் சென்னையில் மழைநீர் வடிகால் வசதி மூலம் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மழைநீர் வடிகால்களில் யாராவது சாக்கடை கழிவுகளை கலக்க விட்டால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.