கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் விஜய் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் திட்டமிட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருவதாக குற்றம் சாட்டினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் செயல்படுகிறார்கள். விபத்து எப்படி நடந்தது என்று விசாரிப்பதற்கு பதிலாக, விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டுவது சரியல்ல" என்று வலியுறுத்தினார்.
விஜய் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பார்க்க வருவார்கள் என்று தெரிந்தும், குறுகிய பாதையில் பிரச்சாரம் செய்யும்படி காவல்துறையே வற்புறுத்தி உள்ளே அனுப்பியதாகக்கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
"கூட்டணி ஆட்சி அமைக்கும் நோக்குடன் அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை ஒழித்துக்கட்ட நினைப்பது சரியல்ல. மேலும், சம்பவம் நடந்து 7 நாட்களாகியும் அவர் பொதுவெளியில் வராமல் இருப்பது ஒரு அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல," என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்தார்.