Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

41 குடும்பங்களுக்கும் விஜய் மகனாக இருக்க வேண்டும்… பிரபல நடிகர் கருத்து!

Advertiesment
Karur stampede

vinoth

, சனி, 4 அக்டோபர் 2025 (13:03 IST)
கடந்த வாரம் சனிக்கிழமை இரவு கரூரில் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒரு துன்பியல் சம்பவமாக முடிந்தது. அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழக முழுவதும் மிகப்பெரிய அளவில் சோக அலைகளை எழுப்பியது.

இந்த சம்பவம் நடந்தபோது விஜய் அங்கிருந்து சென்னை சென்றது அவர் மேலும் அவர் கட்சியின் மேலும் விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களை எழுப்பியது. அதையடுத்து விஜய் பேசி வெளியிட்ட வீடியோவும் அவரிடம் இறந்தவர்கள் பற்றிய குற்றவுணர்வு இல்லை என்ற விவாதங்களை எழுப்பியது.

ஆனால் அதே நேரம் விஜய்க் கட்சியை சேர்ந்தவர்கள் இது ஆளும் கட்சியின் சதி என்று பேசி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் ரஞ்சித் இந்நிகழ்வு குறித்துப் பேசியுள்ளார். அதில் “விஜய் இறந்தவர்களை நினைத்து சோகத்தில் இருப்பார். அந்த துயரம் அவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களுக்கும் அவர் இனிமேல் மகனாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேம்குமாரின் அடுத்த படம் ‘ஆவேஷம்’ போல இருக்கும்… தயாரிப்பாளர் நம்பிக்கை!