சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சோழிங்கநல்லூரில் ஒரு பிரம்மாண்டமான உயர்மட்ட ரயில் நிலையம் அமைய உள்ளது. இது மாதவரம் - சிப்காட் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களும் சந்திக்கும் இணைப்பு முனையமாக செயல்படும்.
இந்த நிலையத்தின் நுழைவாயில் அருகே 8 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் கட்டப்படவுள்ளது. ரயில் பாதைகள் இந்த கட்டிடம் வழியாகவே செல்லும் என்பது இதன் சிறப்பு.
5-வது வழித்தட நடைமேடை சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்திலும், 3-வது வழித்தட நடைமேடை 21.8 மீட்டர் உயரத்திலும் அமையவுள்ளது.
வெளிநாட்டு பாணியில் அமைய இருக்கும் இந்த நிலையத்தின் வடிவமைப்பு, மேலே இருந்து பார்க்கும்போது இரண்டு வழித்தடங்கள் குறுக்காகக் கடக்கும் பிளஸ் (+) குறியீடு போலக் காட்சியளிக்கும். 8 மாடிக் கட்டிடத்தில் முதல் தளம் வாகன நிறுத்துமிடமாகவும், 6 முதல் 8-வது மாடிகள் வரை மெட்ரோ அலுவலகம், கடைகள் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது.
சோழிங்கநல்லூர் நிலையம் போலவே, அருகிலுள்ள துரைப்பாக்கம் ரயில் நிலையமும் இதேபோன்ற சிறப்பம்சங்களுடன் கட்டப்படவுள்ளது