தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொண்டு நிறுத்தி விடுகின்றனர். ஆனால், வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என அமைச்சர் அன்பரசன் கூறியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது பதிவில் கூறியதாவது:
"தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லை நிர்ணயம் குறித்த தனது மாயையான நாடகத்தை நடத்தும் போது, அமைச்சர் அன்பரசனின் இந்த உரையை தனது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுக்கு அவர் ஒளிபரப்புவார் என நம்புகிறோம்.
இது, வட இந்திய சகோதரிகளை அவமதிக்கும் வகையில் துஷ்பிரயோகம் செய்யவும், திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "வட இந்திய சகோதர சகோதரிகளைக் அவமானப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் அன்பரசனுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.