டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக யஸ்வந்த் வர்மா பணியாற்றி வந்த நிலையில், அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, நீதிபதியின் அறையில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டிற்கு வழங்கினர்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணை மேற்கொண்ட பின்னர், டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து அவரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், நீதிபதி வீட்டில் எறிந்த பணத்தின் மதிப்பு மட்டும் ₹11 கோடி என்றும், எரியாமல் இருக்கும் பணத்தின் மதிப்பு ₹26 கோடி என்றும் கூறப்படுகிறது. அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இது குறித்து மேலதிக விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏராளமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் இவ்வளவு பணம் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.