Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

Advertiesment
பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின்  அவர்களே? அண்ணாமலை

Siva

, வியாழன், 20 மார்ச் 2025 (07:34 IST)
ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா திரு ஸ்டாலின் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை. 
 
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. 
 
இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா திரு ஸ்டாலின் அவர்களே?
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!