தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, "நடிகைகளின் இடுப்பை பிடித்துக் கொண்டு நடித்தவர்கள் எல்லாம் அரசியல் செய்கிறார்கள்," என விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்துக்கு தமிழக வெற்றி கழகத்தின் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மதுபான விஷயத்தில் சிக்கி, அவர்களை கைது செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் பாரதிய ஜனதா, தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி நாடகமாடுகிறது. இதைத்தான் எங்கள் கட்சித் தலைவர் கூறிய நிலையில், அண்ணாமலை விஜய் குறித்து 'இடுப்பை கிளியவர்' என்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார்," என அவர் தெரிவித்துள்ளார்.
கதைகள், காவியங்கள், சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும் சினிமாவில் "இடுப்பைப் பற்றியே நினைவிற்கு வந்துள்ளதா?" என்று ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். சுரேஷ்கோபி, சரத்குமார் போன்ற சினிமா கலைஞர்கள் பாஜகவில் உள்ளனர். "அவர்கள் யாரும் நடிகைகளின் இடுப்பை கிள்ளியதில்லையா? அண்ணாமலை எப்படி இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்?" என அவர் விமர்சித்தார்.
வானதி, தமிழிசை போன்ற பெண் தலைவர்கள் அண்ணாமலையின் இந்த பேச்சைக் கேட்டு முகம் சொரிந்திருப்பார்கள். இனிவரும் காலங்களில், இப்படி தரம் தாழ்ந்து பேசாமல் இருப்பது அண்ணாமலைக்கும் அவரது பதவிக்கும் நல்லது," என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.