சட்டப்பேரவையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி "கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தமிழராக இருந்தும், கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர பிரதேசத்திற்கு சென்றதற்கு தி.மு.க. அரசின் முயற்சி இன்மையே காரணம்" என்று குற்றம் சாட்டினார்.
இதற்குப்பதிலளித்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இதில் விவாதிக்க விரும்பாத பல விஷயங்கள் உள்ளன. தமிழக அரசு விரைவில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான ஃபாக்ஸ்கான் முதலீட்டை பெறுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்றார்.
ஃபாக்ஸ்கானின் ஒரு கிளை மட்டுமே முதலீடு செய்ய மறுத்தது; ஒட்டுமொத்த முதலீடும் தவறு இல்லை. தி.மு.க. ஆட்சியில் 14,000 பொறியியல் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளதால், இதுபோன்ற முயற்சிகளை கேலி செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.