Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரனை புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. பாஜகவுக்கு இன்ப அதிர்ச்சி..!

Advertiesment
மு.க.ஸ்டாலின்

Mahendran

, வியாழன், 16 அக்டோபர் 2025 (15:44 IST)
தமிழக சட்டப்பேரவையில் இன்று  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
 
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
 
பாஜக தலைவராக பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். கட்சிகளை கடந்து, அவர் அனைவரிடத்திலும் அன்பாகவும் அமைதியாகவும் பழகும் திறன் கொண்டவர். அவர் கோபத்துடன் பேசி நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
 
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், அவர் அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும்போதும் பொறுமையாகவும், நிதானத்துடனுமே பேசுவார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் சமயத்தில் கூட, அவர் சிரித்த முகத்துடன் சென்று, யாருக்கும் எந்தவித கோபத்தையும் ஏற்படுத்தாத வகையில் அணுகக் கூடியவர்.
 
அத்தகைய சிறந்த அரசியல்வாதியாக விளங்கும் அவர், தற்போது 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு என் சார்பிலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், எங்களுடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் முத்துசாமிக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
 
முதலமைச்சரின் வாழ்த்தை தொடர்ந்து, சட்டப்பேரவை சார்பில் இருவருக்கும்பிறந்தநாள் வாழ்த்துகள் என சபாநாயகர் மு.அப்பாவுவும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!