அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு உடன் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதிலும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், 60% மக்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக பணம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் இல்லை என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் 2000 ரூபாய் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட நிலையில், 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று இன்றைய தமிழக முதல்வர் குரல் கொடுத்தார். ஆனால், அவர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்த நிலையில், தற்போது அந்த பணமும் இல்லாமல் வெறும் அரிசி, கரும்பு, வெல்லம் மட்டுமே கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் பணம் கொடுத்து பழகி விட்டதால் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், இந்த ஏமாற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு தேர்தலின் போது இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.