ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததை அடுத்து விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த ஒரு வருடத்திற்குள் பொதுத்தேர்தல் வர இருப்பதால் இந்த தேர்தலை திமுக கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முறை திமுகவே இந்த தொகுதியில் போட்டியிடும் என்று கூறப்படும் நிலையில் வழக்கம் போல காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இரட்டை இலை சின்னம் வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் நிலையில் அதன் முடிவு நெகட்டிவாக இருந்தால் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் தெரிகிறது/
இந்த நிலையில் பாஜக இந்த தொகுதியில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் வேட்பாளரையும் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துவிட்டதால் இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று கூறுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் வேட்பாளரை களம் இறக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது கடந்த முறை நடந்த இடைத்தேர்தலை விட இந்த முறை இடைத்தேர்தல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .