Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஸி டீ கடை நடத்திய உங்களை!.. பன்னீர் செல்வத்தை பொளந்த அதிமுக ஐடி விங்...

Advertiesment
ops
யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் பலமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மூன்று முறை முதல்வராக இருந்தவர், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்தவர் தற்போது திமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அது எல்லாவற்றையும் எடப்பாடி பழனிச்சாமி தடுத்து விட்டார்.. அந்த கோபத்தில்தான் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் ‘ரோஸி டீ கடை நடத்திக்கொண்டிருந்த உங்களை ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராக்கியது இந்த இயக்கம்.. ஆனால் நீங்கள் உடன்பிறப்பாகவே இருந்தீர்கள்.. எம்ஜிஆர் மாளிகியில் கருணாநிதி வசனம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்.. அரசியல் அனாதையாக அதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு ஆளானீர்கள்..

பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே?! உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!

இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.

(பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!)

என கூறப்பட்டிருக்கிறது.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி சீட் கொடுத்தால் திமுகவில் போட்டியிடுவேன்!.. ஓபிஎஸ் பேட்டி...