தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான தெலுங்கு நடிகை பூனம் கவுர். இவர் தமிழில் உன்னை போல் ஒருவர், பயணம், வெடி, என் வழி தனி வழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பூனம் கவுர் பிரபல தெலுங்கு நடிகர் திரி விக்ரம் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் “திரிவிக்ரம் மீது திரைப்பட கலைஞர்கள் சங்கத்திடம் நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது எனது கெரியரை அழித்தது மட்டுமின்றி என ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் அவரை ஆதரிப்பதை பார்க்கும்போது மனவேதனையாக உள்ளது” என கூறியுள்ளார்.
ஏற்கனவே ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான பூனம் கவுரின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K