நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து புஷ்பா 2 மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி ஆறு நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இந்த வசூல் தொடரும் பட்சத்தில் புஷ்பா மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என தெரிகிறது.
இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புஷ்பா படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அல்லுஅர்ஜுன் அடுத்து த்ரி விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.