சென்னை விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான சேவை முனையத்தில் இருந்து 165 பயணிகளுடன் விமானம் ஒன்று பெங்களூர் நோக்கி புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து வானில் வட்டமடித்து திரும்பிய விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே வந்து தரையிறங்கியது. இந்த அவசர தரையிறக்க ஏற்பாடுகளால் பிற விமானங்கள் தாமதமாகின. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Edit by Prasanth.K