Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விபத்து.. கண்ணாடி கதவுகள் உடைந்ததால் பரபரப்பு..!

Advertiesment
Chennai Airport

Mahendran

, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (10:12 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் கண்ணாடி சுவர்கள், கதவுகள், மற்றும் மேற்கூரைகள் அடிக்கடி உடைந்து விழுவது வழக்கமாக இருந்தது. இதுவரை சுமார் 85-க்கும் மேற்பட்ட இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்று, பன்னாட்டு முனையத்தின் வெளியேறும் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பயணிகள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, நுழைவு வாயிலில் இருந்த 4 அடி அகலம் மற்றும் 8 அடி உயரம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென பலத்த சத்தத்துடன் நொறுங்கியது. ஆனால், கீழே விழாமல் அங்கேயே நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
 
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக அங்கு விரைந்து வந்து, உடைந்த கதவு அருகே யாரும் செல்லாதவாறு எச்சரிக்கை பலகைகளை வைத்தனர். மேலும், பயணிகளை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். 
 
இதற்கிடையில், உடைந்த கண்ணாடி கதவை அகற்றிவிட்டு புதிய கதவை பொருத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம், பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நெருங்கியது..!