தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தூத்துக்குடிக்கு பரப்புரைக்கு செல்ல உள்ள நிலையில் தூத்துக்குடி போலீஸ் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்கிறார். கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், வரும் சனிக்கிழமை நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். அதன்பின்னர் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்கிறார். ஆனால் திருச்சியில் விஜய் வந்தபோதே அவரை காண ஏராளமானோர் கூடியதோடு, சாலையில் உள்ள தடுப்புகள், சாலையோர கம்பிகள் என பல பொது சொத்துகளை சேதப்படுத்தியிருந்தது விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பாக தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தூத்துக்குடி போலீஸ். அதில் “விஜய் தூத்துக்குடி வரும்போது தவெகவினர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி வழங்கப்படும் இடத்தில் தொண்டர்கள் ஒழுங்காக நடந்துக் கொள்ள வேண்டும்.
திருச்சி போல தேவையில்லாத வேலைகளை செய்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். விஜய் பிரச்சாரம் நடத்த உள்ள இடங்களை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K