தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு நிரந்தர வேலை தேவையில்லை என திருமாவளவன் பேசியிருப்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், திருமாவளவன் சுகாதார பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய எல்.முருகன் “திமுக கூட்டணியில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக திருமாவளவன் இவ்வாறு பேசி வருகிறார். திமுக எங்கே தங்களை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விடுமோ என அவர் அஞ்சுகிறார். அவருக்கு பட்டியல் இன மக்களை பற்றி எப்போதுமே கவலையில்லை. அவருக்கு தேவை எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுதான்
திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்துள்ளபோதும் திருமாவளவன் எதற்கும் முறையாக குரல் கொடுக்கவில்லை. பல விஷயங்களில் வாய் திறக்காமலே இருந்து வருகிறார்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K