கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி மாற்றம் குறித்த ஊகங்கள் நிலவும் நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில் காசி சாமியார்கள் வருகை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியில் இருந்து வந்த சாமியார்கள், பெங்களூரு இல்லத்தில் டி.கே. சிவக்குமாருக்கு ஆசீர்வாதம் வழங்கினர். ஒரு சாமியார், "நான் காசியிலிருந்து வந்து அவருக்கு ஆசீர்வாதம் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.
டி.கே.எஸ் முதலமைச்சர் ஆவதற்காக, அவரது ஆதரவாளர்கள் ஹாவேரி, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பல இடங்களில் விசேஷ பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், மின்சாரத் துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் டி.கே. சிவக்குமாரை சந்தித்து, அவர் பொறுமையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா வந்து நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ராகுல் காந்தியின் வருகை கர்நாடக அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.