Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய தயாரிப்பு இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி!!

இந்திய தயாரிப்பு இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி!!
, வியாழன், 29 டிசம்பர் 2022 (09:41 IST)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டு உஸ்பெகிஸ்தான் நாட்டில் குறைந்தது 18 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்.


இது குறித்து உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதோடு சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் - தயாரிப்பில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உள்ளூர் மருந்தாளுனர்களின் ஆலோசனையின் பேரில் அவர்களின் பெற்றோர்களால் குழந்தைகளுக்கான வழக்கமான அளவைத் தாண்டிய அளவுகளுடன் சிரப் கொடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, 2-7 நாட்களுக்கு வீட்டில் இந்த சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுகளில் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சிரப்பை பெற்றோர்கள் சளிக்கு எதிரான மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர்.

18 குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களில் இருந்தும் Doc-1 Max மாத்திரைகள் மற்றும் சிரப்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும் நிலைமையை சரியான நேரத்தில் பகுப்பாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் ஏழு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் உத்தரபிரதேச மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் ஆகியவை இணைந்து விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானிடம் இருந்தும் விபத்து மதிப்பீடு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் ஸ்கேனரின் கீழ் வருவது ஒரு வருடத்தில் இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், காம்பியாவில் 70 குழந்தைகள் இறந்ததற்கு ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த இருமல் சிரப்களுடன் தொடர்பு இருந்தது.

இதைத் தொடர்ந்து, உற்பத்தித் தரத்தை மீறியதற்காக சோனேபட்டில் உள்ள அதன் யூனிட்டை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அக்டோபர் மாதம் மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பு தப்பா ஸ்டேட்டஸ் வெச்சா தட்டி தூக்கிடுவோம்! – வாட்ஸ் அப் புதிய அப்டேட்!