ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர நிகழ்வை அமெரிக்கா கண்டித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருக்கின்றன. அம்மாநிலத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லை பகுதியான லோசி (Line of Control) அருகிலும் இடையிடையே சண்டைகள் ஏற்படுவதுண்டு."
"பஹல்காம், ஸ்ரீநகர், குல்மார்க் போன்ற பிரபல சுற்றுலா இடங்களிலும் பாதுகாப்பு சூழ்நிலை சீராக இல்லை. எனவே, காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம். ஆனால், கிழக்கு லடாக் மற்றும் லே நகரத்திற்கு பயணத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது."
மேலும், "இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே துப்பாக்கி சண்டை நிகழ வாய்ப்பு உள்ளதால், அந்த எல்லையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் செல்லும் பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் கூறியுள்ளது.