Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஹல்காம் தாக்குதல் தேர்தல் நேர அரசியலா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது!

Advertiesment
Assam MLA

Prasanth Karthick

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (08:50 IST)

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

 

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய அரசு, 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. இருநாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து விமர்சித்து பேசிய ஏஐயுடிஎஃப் கட்சியின் அசாம் சட்டமன்ற உறுப்பினரான அமினுல் இஸ்லாம், இந்த தாக்குதலை தேர்தல் அரசியல் என குறிப்பிட்டு பேசியதும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

அதை தொடர்ந்து அவர் தேசிய பாதுகாப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதை தொடர்ந்து அவரது கருத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென அவர் உறுப்பினராக இருந்த ஏஐயுடிஎஃப் கட்சி தெரிவித்துள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் எனது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என எச்சரித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!