அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் கைகுலுக்கக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் முறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அட்டாரி-வாகா எல்லையை மூட உத்தரவிட்ட நிலையில், பாகிஸ்தானியர் அனைவரும் நாட்டை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கொடி இறக்கும் நிகழ்வு தினமும் நடைபெறும் என்பதும், அந்த சமயத்தில் இருநாட்டு வீரர்களும் கை குலுக்குவார்கள் என்பது வழக்கமான ஒன்று. ஆனால், பெஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு உள்ள கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் வீரர்களுடன் எந்தவித அணிவகுப்பும் நடத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து, அட்டாரி-வாகா எல்லை கதவு மூடப்பட்டு இருப்பதாகவும், கொடியிருக்கும் நிகழ்ச்சி நடந்தாலும் கைகுலுக்கும் நிகழ்வு நடக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.