Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் வான்வெளி தடை: சுற்றி செல்லும் விமானங்கள்.. கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு..!

Advertiesment
Flight

Mahendran

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (10:30 IST)
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் விமான கட்டணங்களில் உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. வட இந்தியாவிலிருந்து செல்லும் சர்வதேச விமானங்களின் பயண நேரம் 2 மணி நேரத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இத்துடன், பாகிஸ்தானுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான பதிலடியாக பாகிஸ்தான் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதித்துள்ளது.

இதனால், டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்க, இந்த விமானங்கள் அரபிக் கடலின் மீது நீண்ட பயணங்களை மேற்கொள்ளும். இது, கட்டணங்களில் 8 முதல் 12 சதவிகிதம் வரை உயர்வை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும், விமானங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதால், எரிபொருள் செலவும் அதிகரிக்கும். இதன் காரணமாக, பயண நேரம் 2 முதல் 3 மணிநேரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!