Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து… 233 பயணிகள் பலி...900 பேருக்கு மேல் காயம்

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து… 233 பயணிகள் பலி...900 பேருக்கு மேல் காயம்
, சனி, 3 ஜூன் 2023 (08:27 IST)
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஒடிசாவின் பால்ஷோர் என்ற பகுதியில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

இந்த ரயில்கள் மோதி விபத்து நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது யஸ்வந்தர் ரயில் மோதி விபத்தில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.

இப்போது மீட்புப்படையினரும் போலீஸாரும் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.  மருத்துவக்குழுவும் சம்பவ இடத்தை அடைந்துள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 900 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த கோர விபத்து செய்தி நாடு முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்றிக் கொழுப்பில் விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - 'ஆபத்து' என எச்சரிக்கும் நிபுணர்கள்