Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்

kerala rail burn
, வெள்ளி, 2 ஜூன் 2023 (21:40 IST)
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இன்று இரவு ஒடிஷா மாநிலம் பஹானகா ரயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமான தடம் புரண்டு, அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விபத்திற்குள்ளானது.

இதில், 3 சிலிப்பர் பெட்டிகள் தவிர அனைத்து பெட்டிகளும் தரம் புரண்டன, இந்த விபத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக பாலசோர் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இவ்விபத்து பற்றி ஓடிஷா முதல்வருடன் தமிழக முதல்வர்  முக.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''கலைஞரின் 100 வது பிறந்த நாள்''- முதல்வர் முக. ஸ்டாலின் புதிய உத்தரவு