Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் ரயிலில் சாகசம் செய்த நபர் பலி...பரவலாகும் வீடியோ

Advertiesment
train
, வியாழன், 27 அக்டோபர் 2022 (23:14 IST)
சமீப காலமாக ரயில், பேருந்துகளில் சாகசவம் செய்வதாக நினைத்துக் கொண்டு இளைஞர்கள், ஆபத்தான செயல்களில் ஈடுபடும்   நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ரயில் பெட்டிப் படிக்கட்டில் இருந்து தன் உடலை வெளியே நீட்டியபடி, ஒரு நபர் தொங்கிக் கொண்டு சென்றார். இது எந்த இடம் என்று சரியயாகக் குறிப்பிடவில்லை.

உள்ளே ரயில் பெட்டி காலியாக இருந்தும் அவர் சாகஸ்ம் செய்வதை மற்றொருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது.

சில இடங்களில் கரண்ட் கம்பங்கள், போஸ்ட்கள், என பல ஆபத்தான இடனங்களில் தாண்டிய அவர், ஒருகட்டத்தில் ஒரு கம்பத்தில் அடித்து விழுந்தார். அந்த இளைஞருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரயில்வேதுறை பலமுறை எச்சரித்தும் இதுபோன்ற விபரீத விளையாட்டுகள் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபடுவதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்